யார் இந்த தியாகி சங்கரலிங்கனார்?
சங்கரலிங்கனார் நாட்டின் விடுவிதலைக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அரும்பாடுபட்டவர்.
தியாகி சங்கரலிங்கனாரின் கோரிக்கைகன்:
தமிழ் நாடு என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் அவரின் உண்ணாவிரதத்தில் முன் வைக்கவில்லை, அதனுடன் சேர்த்து 12 கோரிக்கைகளை முன்வைத்தார். அந்த கோரிக்கைகள் என்னவென்பதை பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
எந்த நிகழ்வு இவரை உண்ணாவிரதம் இருக்க துண்டியது:
தியாகி சங்கரலிங்கனார் பல விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டவர். பொட்டி ஸ்ரீ ராமலு மெட்ராஸ் ஸ்டேட்டில் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள பகுதியை தனி மாநிலமாக பிரித்து தரும்படி உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். அதன் விளைவாக ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. இந்த நிகழ்வு ஏற்படுத்திய பாதிப்பிலும் மா.பொ.சியின் தமிழரசு கழகம் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்காக போராட்டம் நடத்தியதன் தூண்டுதலிலும் உண்ணாவிரதத்தை நடத்த திட்டமிட்டார் சங்கரலிங்கனாரின்.
12 அம்ச கோரிக்கைகள்:
- மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என பெயரிட வேண்டும்.
- மொழி வழி மாநிலம் அமைத்திட வேண்டும்.
- ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்ய வேண்டும்.
- வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விளக்கி சைவ உணவு மட்டுமே அளித்திட வேண்டும்.
- அரசு பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிய வேண்டும்.
- ஆடம்பர செலவுகளை குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களை போல் வாழ வேண்டும்.
- தேர்தல் முறையில் மாறுதல் செய்திட வேண்டும்.
- தொழிற் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
- இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
- விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலை குத்தகையாக அளித்தல் வேண்டும்.
- மத்திய அரசு இந்தியை மட்டுமே அலுவலக மொழியாகப் பயன்படுத்தக் கூடாது.
- பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வதை தடுத்திட வேண்டும்.
அதில் 12 கோரிக்கைகளை முன் வைத்தார். இதில் முதன்மையானது சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதாகும். இவரது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் தனது வீட்டின் முன்பு ஜூலை 27ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். தன்னுயிர் பிரியும் தருவாயிலும் தன் முடிவில் இருந்து அவர் மாறவில்லை. இதன் முதல் வெற்றி தான் மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ் நாடு என்று பெயர் மாற்றப்பட்டது.
ஒரு மனிதனுடைய பிறப்பு அவனை அடையாளம் காட்டுவது இல்லை. அவன் எவ்வாறு வாழ்ந்தான் என்பதே அவனை அடையாளப்படுத்துகிறது, என்பதற்கு ஏற்ப ஒரு சாமானியனான சங்கரலிங்கத்தின் வாழ்க்கையில் அவர் செய்த தியாகச் செயல் அவரின் மரணத்திற்குப் பிறகும் அவரை நினைவுபடுத்துகிறது.